Skip to main content

கன்னி ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 !!

கன்னி ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 !!

வாக்கிய பஞ்சாங்கம் :

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2018 அக்டோபர் மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை 10:15 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார்.

திருக்கணித பஞ்சாங்கம் :

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2018 அக்டோபர் மாதம் 11ம் தேதி வியாழக்கிழமை 07.20 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார்.

நெளிவு சுளிவு உணர்ந்து கனிவுடன் பேசும் கன்னி ராசி அன்பர்களே !!
குருபகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு இடம் பெயர்கின்றார். முயற்சிக்கேற்ப வாழ்க்கையில் வளர்ச்சியும், வெற்றியும் காண்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு காலதாமதமாக கிடைக்கும். எண்ணிய செயல்களை செயல்படுத்த பலவிதமான தடைகள் குறுக்கிடலாம். தொழில் நிமிர்த்தமாக ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். பொருளாதார வளம் மேம்படும். அரசு வகையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். சிறுதூர பயணங்கள் சாதகமாக அமையும். தொலைதொடர்பு சார்ந்த துறைகளில் புதிய முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.

திறமைக்கு ஏற்ற அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பிரமுகர்களின் அறிமுகம் சாதகமாகும். கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கி அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புது வேலைவாய்ப்புகள் அமையும். சுப செயல்கள் கைகூடி வரும். 

புதுவிதமான சிந்தனைகள் மலரும். தந்தையின் ஆரோக்கியமும், அணுகூலமும் மகிழ்ச்சியை தரும். தந்தை வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் அகலும். வீண்செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும், ஆராய்ச்சி சம்பந்தமான துறைகளில் முன்னேற்றமும் உண்டாகும். நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். மனதில் இருந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தடைபட்ட தனவரவு கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். ஆன்மீக பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான கடன் வாய்ப்புகளால் அபிவிருத்தி உண்டாகும். தொழில்நுட்ப அறிவு மேம்படும். பண விவகாரத்தை நீங்களே கவனிப்பது நல்லது. ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் இருக்கவும். ஆராய்ச்சி சம்பந்தமான கல்வியில் வழிகாட்டுதல் கிடைக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். ஆசிரியர்களிடம் விதண்டாவாதத்தை தவிர்க்கவும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையினருக்கு முன்னேற்றமும், சாதகமற்ற சூழலும் அமையும். புதுவிதமான அனுபவம் உண்டாகும். மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மீதான விமர்சனங்களும், வதந்திகளும் அவ்வப்போது தோன்றி மறையும். புதுவிதமான கற்பனைகளும், எண்ணங்களும் வளர்ச்சியைத் தரும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகத்தில் உங்கள் பணிகளை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டி வரும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தொந்தரவுகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அமைதி காக்கவும். வேலை சம்மந்தமாக சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். புதிய வாய்ப்புகளை சிந்தித்து ஏற்றுக்கொள்ளவும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். நவீன இயந்திரம் வாங்க கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பணியாளர்களிடம் நிதான போக்கை கையாளவும். 

பெண்களுக்கு :

பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க அலைச்சலும், பதற்றமும் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். எதிர்பாராத பரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். மூத்த அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதல் கிடைக்கப் பெறுவார்கள். தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது உங்கள் மீதான மேன்மையை அதிகப்படுத்தும். 

பரிகாரம் :

https://amzn.to/2SgdzdQ

செவ்வாய்க்கிழமையில் முருகரை வணங்கி வர காரியத் தடைகள் அகலும்.

வெள்ளிக்கிழமையன்று ராகு நேரத்தில் காளிக்கு தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.

Comments

Popular posts from this blog

Macimakam

Macimakam
Varuna Bhagavan has once suffered a severe dose. So he was thrown into the sea as he was built. Varun was thrown into the sea because of rain and famine in the world. All the diseases were suffering. All the devotees prayed to Lord Shiva to seek the blessings of Lord Varuna. Lord Shiva heard the prayer of Lord Varuna. That is the day of the month of Maha, the day of the release of Varuna. That is what we celebrate as the Masih Mahat.
Also, Lord Vishnu, who was freed, said to Lord Shiva, "When I was in the sea, I prayed to them, and my drops stopped. Likewise, on this day, sinking into the sacred teeth, the devotees worshiping the devotees prayed for their sins, torments and sufferings. Lord Shiva gave him the gift of Varun. Since then, the holy water course is taking place with great pleasure. Similarly, there are many more instances of mythology. The name of the tirthas and the shrines!1. Gas Thermal - Diseases
2. Ganga Theertham - Giving the job.
3. Brahmma Theertham - …

ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரின் பல வகையான அவதாரம்!! ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம். 
பஞ்சமுக ஆஞ்சநேயர் : 

மயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின்போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்" வடிவம் ஆகும்.
நிருத்த ஆஞ்சநேயர் : 
இந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும். 
கல்யாண ஆஞ்சநேயர் : 
அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படு…

கும்பம்

கும்பம்
சமீபத்தில், குடும்ப விஷயங்களில், தடைகள் இருப்பதாக நினைத்தால், அதற்கான தெளிவான முடிவு உண்டாவதை காணலாம். பெற்றோருடனோ, பிரியமானவர்கலுடனோ, மன வேற்றூமைகள் இன்றி விஷயங்கள் தெளிவாகும். தெளிவான எண்ணத்தொடர்பினால், தடைகள் விலகும்.
உங்களின் சிறந்த அணுகு முறை புதிய முயற்சியின் துவக்க தடைகளை நீக்கும். தன்னம்பிக்கையை உயர்த்தி நெருக்கடியை கையாளவும். பின்னடைவுகள் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். வெற்றி ஏற்படும்.|
https://amzn.to/2NnixEZ

இன்று உங்கள் துணைவர் அவர் / அவள் தனது தேவைகளையும், விருப்பங்களையும் உங்களிடம் சொல்வதை காதுகளையும், உள்ளத்தையும் திறந்து வைத்துக்கொண்டு கேட்கவும். நீங்கள் அவரிடம் அக்கறையாக இருப்பதை வெளிக்காட்டினால், உங்கள் உறவு இன்று உண்மையிலேயே மலரலாம்
பணம் தொடர்பான பயன்கள் மற்றும் அங்கிகாரம் உங்களுக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் கிடைக்கும். இன்றைய தினம் நீங்கள் செய்த கடினமுயற்சியும் இல்லாமல் நீங்கள் அதிகமான பணத்தைப் பெறுவீர்கள். இது நீங்கள் செய்த முயற்சியின் பலன் ஆகும். இது வரவேற்க்கத்தக்க செயல் ஆகும்.
உங்களுக்கு சளித்தொல்லை ஏற்படலாம்.குளிர் பானங்களை தவிற்க்கவும். பிரச்சனை சிறீ…