Skip to main content

கடகம்

கடகம்

கடகம் ராசி பற்றி

ஜோதிட சாஸ்திரத்தில் நான்காவது ராசியாகிய கடக ராசிக்காரரின் குணங்கள் மற்றும் வாழ்க்கை இரகசியத்தை பற்றி பார்ப்போம்.

நல்ல குணங்களுக்கு உரியவர்களாகிய கடக ராசியின் அதிபதி சந்திரன் ஆவார். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிக்காரர்கள் என்கிறார்கள். 

கடகத்தின் வேறு பெயர்கள் :

மதி, நள்ளி, குளிர், கள்வன், சேக்கை, அலவன், நண்டு, கொண்டல், பாறப்பன் ஆகியவை கடக ராசியை குறிக்கும் வேறு பெயர்கள் ஆகும்.

நட்பு இராசிக்காரர்கள் :

கடக ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.

குணங்கள் :

கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு இறங்கமாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். தர்ம காரியங்கள் செய்வதில் முதன்மையானவர்களாக இருப்பார்கள். இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதில் சிறந்தவர்கள். இந்த ராசிக்காரர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள், தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்துக்காட்டுவர்.

கடக ராசிக்காரர்களை பொருத்தவரை உடல் நிலையில் ஒரே மாதிரியான ஆரோக்கியம் இருக்காது. சில நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது போன்று தோன்றும். சில நாட்கள் ஆரோக்கியம் குறைந்து காணப்படுவார்கள். தெளிவான மன நிலை இருக்காது. மன குழப்பங்கள் அதிகமாக இருக்கும்.

இவர்களுக்கு அறிவும் திறமையும் இயற்கையாகவே அமைந்திருக்கும். மிகப்பெரிய பதவிகளைக் கூட சர்வசாதரணமாக ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டுவர். இந்த ராசிக்காரர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பர். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. கடக ராசிக்காரர்களுக்கு பெரியவர்களிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். 

சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார். பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள். கலை, நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் செய்யும் சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஓவியம் தீட்டுதல், போலீஸ், இராணுவம் போன்றவற்றிலும் ஒரு சிலருக்கு அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். 

அதிர்ஷ்டம் தருபவை :

எண் - 1,2,3,9,10

நிறம் - வெள்ளை, சிவப்பு

கல் - முத்துhttps://amzn.to/2TVUkI3
தி - வடகிழக்கு

Comments

Popular posts from this blog

Macimakam

Macimakam
Varuna Bhagavan has once suffered a severe dose. So he was thrown into the sea as he was built. Varun was thrown into the sea because of rain and famine in the world. All the diseases were suffering. All the devotees prayed to Lord Shiva to seek the blessings of Lord Varuna. Lord Shiva heard the prayer of Lord Varuna. That is the day of the month of Maha, the day of the release of Varuna. That is what we celebrate as the Masih Mahat.
Also, Lord Vishnu, who was freed, said to Lord Shiva, "When I was in the sea, I prayed to them, and my drops stopped. Likewise, on this day, sinking into the sacred teeth, the devotees worshiping the devotees prayed for their sins, torments and sufferings. Lord Shiva gave him the gift of Varun. Since then, the holy water course is taking place with great pleasure. Similarly, there are many more instances of mythology. The name of the tirthas and the shrines!1. Gas Thermal - Diseases
2. Ganga Theertham - Giving the job.
3. Brahmma Theertham - …

ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரின் பல வகையான அவதாரம்!! ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம். 
பஞ்சமுக ஆஞ்சநேயர் : 

மயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின்போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்" வடிவம் ஆகும்.
நிருத்த ஆஞ்சநேயர் : 
இந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும். 
கல்யாண ஆஞ்சநேயர் : 
அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படு…

கும்பம்

கும்பம்
சமீபத்தில், குடும்ப விஷயங்களில், தடைகள் இருப்பதாக நினைத்தால், அதற்கான தெளிவான முடிவு உண்டாவதை காணலாம். பெற்றோருடனோ, பிரியமானவர்கலுடனோ, மன வேற்றூமைகள் இன்றி விஷயங்கள் தெளிவாகும். தெளிவான எண்ணத்தொடர்பினால், தடைகள் விலகும்.
உங்களின் சிறந்த அணுகு முறை புதிய முயற்சியின் துவக்க தடைகளை நீக்கும். தன்னம்பிக்கையை உயர்த்தி நெருக்கடியை கையாளவும். பின்னடைவுகள் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். வெற்றி ஏற்படும்.|
https://amzn.to/2NnixEZ

இன்று உங்கள் துணைவர் அவர் / அவள் தனது தேவைகளையும், விருப்பங்களையும் உங்களிடம் சொல்வதை காதுகளையும், உள்ளத்தையும் திறந்து வைத்துக்கொண்டு கேட்கவும். நீங்கள் அவரிடம் அக்கறையாக இருப்பதை வெளிக்காட்டினால், உங்கள் உறவு இன்று உண்மையிலேயே மலரலாம்
பணம் தொடர்பான பயன்கள் மற்றும் அங்கிகாரம் உங்களுக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் கிடைக்கும். இன்றைய தினம் நீங்கள் செய்த கடினமுயற்சியும் இல்லாமல் நீங்கள் அதிகமான பணத்தைப் பெறுவீர்கள். இது நீங்கள் செய்த முயற்சியின் பலன் ஆகும். இது வரவேற்க்கத்தக்க செயல் ஆகும்.
உங்களுக்கு சளித்தொல்லை ஏற்படலாம்.குளிர் பானங்களை தவிற்க்கவும். பிரச்சனை சிறீ…