Skip to main content

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்:


முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.
வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.
ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இரு வருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன.
அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் ஒரு இந்து  கடவுளும் பிரம்மச்சாரியும் ஆவார். இவர் பூமாதேவியின் மகனாக கருதப்படுகின்றார். சோதிடத்தின் படி செவ்வாய் பகவான், மேடம் மற்றும் விருச்சிகம் ஆகிய இராசிகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
செவ்வாய் தோஷ பரிகாரங்கள்:
 செவ்வாய்க்கிழமைகளில் முருகன் மற்றும் முருகனின் அம்சம் கொண்ட அங்காரகனை வழிபட்டு வந்தால் செவ்வாயின் தாக்கம் குறையும். விநாயகருக்கு செவ்வாய்க்கிழமை வரும் சதுர்த்தி நாளில் அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்தால் நல்லது நடைபெறும். இவ்வாறு 41 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமையில் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் துவரை தானம் செய்தால் செவ்வாயின் தாக்கம் குறையும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் காயத்ரி மந்திரம், தியான மந்திரம், சூரிய கவசம் போன்றவற்றை கடவுளை மனமுருகி வழிபட்டு சொல்லி வந்தால் தோஷம் விலகும்.செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தினக்கல் பதித்த தங்க மோதிரத்தை மோதிர விரலில் வலது கரத்தில் அணியலாம். முருகனுக்கு சிவப்பு மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விரைவில் நீங்கிவிடும்.நவகிரகத்தில் உள்ள செவ்வாய் கிரகத்துக்கு 27 செவ்வாய்க்கிழமைகள் நெய்விளக்குபோட்டு வந்தால் செவ்வாய் தோஷம் விலகும்.நவகிரக செவ்வாய்க்கு பிறந்ததேதி அல்லது கிழமைகளில் அர்ச்சனைச் செய்வதால் நன்மை உண்டாகும். இதுபோன்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோவில்கள் :
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பு வாய்ந்த பரிகார ஸ்தலமாகும். மேலும் சுப்ரமணியசுவாமி, சென்னிமலை, ஈரோடு.சங்கமேஸ்வரர், பவானி, ஈரோடு. கந்தசுவாமி, திருப்போரூர், காஞ்சிபுரம்.  மலையாள தேவி துர்காபகவதி அம்மன், நவகரை, கோயம்புத்தூர். அமிர்தகடேஸ்வரர், மேலக்கடம்பூர், கடலூர்.அருணஜடேசுவரர், திருப்பனந்தாள், தஞ்சாவூர்.கைலாசநாதர், கோடகநல்லூர், திருநெல்வேலி.  வீரபத்திரர், அனுமந்தபுரம், காஞ்சிபுரம்.கல்யாண கந்தசுவாமி, மடிப்பாக்கம், சென்னை. அகஸ்தீஸ்வரர், வில்லிவாக்கம், சென்னை. தேனுபுரீஸ்வரர், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர்.அகோர வீரபத்திரர், வீராவாடி, திருவாரூர். பிரளயநாதசுவாமி, சோழவந்தான், மதுரை. விருத்தபுரீஸ்வரர், திருப்புனவாசல், புதுக்கோட்டை. சுப்பிரமணியர் காங்கேயன், காங்கேயநல்லூர், வேலூர்.போன்ற கோவில்களுக்கு சென்று வழிபட்டும் வளம் பெறலாம்.

Comments

Popular posts from this blog

Macimakam

Macimakam
Varuna Bhagavan has once suffered a severe dose. So he was thrown into the sea as he was built. Varun was thrown into the sea because of rain and famine in the world. All the diseases were suffering. All the devotees prayed to Lord Shiva to seek the blessings of Lord Varuna. Lord Shiva heard the prayer of Lord Varuna. That is the day of the month of Maha, the day of the release of Varuna. That is what we celebrate as the Masih Mahat.
Also, Lord Vishnu, who was freed, said to Lord Shiva, "When I was in the sea, I prayed to them, and my drops stopped. Likewise, on this day, sinking into the sacred teeth, the devotees worshiping the devotees prayed for their sins, torments and sufferings. Lord Shiva gave him the gift of Varun. Since then, the holy water course is taking place with great pleasure. Similarly, there are many more instances of mythology. The name of the tirthas and the shrines!1. Gas Thermal - Diseases
2. Ganga Theertham - Giving the job.
3. Brahmma Theertham - …

ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரின் பல வகையான அவதாரம்!! ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம். 
பஞ்சமுக ஆஞ்சநேயர் : 

மயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின்போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்" வடிவம் ஆகும்.
நிருத்த ஆஞ்சநேயர் : 
இந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும். 
கல்யாண ஆஞ்சநேயர் : 
அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படு…

கும்பம்

கும்பம்
சமீபத்தில், குடும்ப விஷயங்களில், தடைகள் இருப்பதாக நினைத்தால், அதற்கான தெளிவான முடிவு உண்டாவதை காணலாம். பெற்றோருடனோ, பிரியமானவர்கலுடனோ, மன வேற்றூமைகள் இன்றி விஷயங்கள் தெளிவாகும். தெளிவான எண்ணத்தொடர்பினால், தடைகள் விலகும்.
உங்களின் சிறந்த அணுகு முறை புதிய முயற்சியின் துவக்க தடைகளை நீக்கும். தன்னம்பிக்கையை உயர்த்தி நெருக்கடியை கையாளவும். பின்னடைவுகள் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். வெற்றி ஏற்படும்.|
https://amzn.to/2NnixEZ

இன்று உங்கள் துணைவர் அவர் / அவள் தனது தேவைகளையும், விருப்பங்களையும் உங்களிடம் சொல்வதை காதுகளையும், உள்ளத்தையும் திறந்து வைத்துக்கொண்டு கேட்கவும். நீங்கள் அவரிடம் அக்கறையாக இருப்பதை வெளிக்காட்டினால், உங்கள் உறவு இன்று உண்மையிலேயே மலரலாம்
பணம் தொடர்பான பயன்கள் மற்றும் அங்கிகாரம் உங்களுக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் கிடைக்கும். இன்றைய தினம் நீங்கள் செய்த கடினமுயற்சியும் இல்லாமல் நீங்கள் அதிகமான பணத்தைப் பெறுவீர்கள். இது நீங்கள் செய்த முயற்சியின் பலன் ஆகும். இது வரவேற்க்கத்தக்க செயல் ஆகும்.
உங்களுக்கு சளித்தொல்லை ஏற்படலாம்.குளிர் பானங்களை தவிற்க்கவும். பிரச்சனை சிறீ…